புதுடெல்லி செப், 19
தமிழகத்தில் 3.04 கோடி மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக மதிய மின்துறை தகவல் வெளியிட்டுள்ளது அதன்படி வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட 3. 32 கோடி மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 28 லட்சம் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 23.43 லட்சம் விவசாய இணைப்புகளில் 4. 23 லட்சத்திற்கு மட்டுமே மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.