சென்னை செப், 4
தமிழை தன்னால் வாசிக்க முடியும் ஆனால் பேசுவது தான் மிகவும் சிரமமாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கண்டிப்பாக ஒருநாள் நீண்ட நாள் ஆசையான தமிழில் பேசுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த தேசத்தை சிலர் இனம் மதம் மொழியின் பெயரால் துண்டாட நினைப்பதாகவும் இத்தகைய பிரிவினைவாத போக்கிற்கு மாணவர்கள் பலியாகி விடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.