கீழக்கரை ஆக, 30
நமது கீழக்கரை நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் செயற்குழு கூட்டம் கடந்த 28.08.2024 அன்று மாலை ஜின்னாதெரு செய்யதுல் ஹசனாத் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கௌரவ தலைவரும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியுமான சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமை வகித்தார். கௌரவ ஆலோசகரும் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனருமான MKE.உமர் முன்னிலை வகிக்க கமிட்டியின் செயலாளரும் அல்மஸ்ஜிதுர்ரய்யான் பஜார் பள்ளியின் தலைவருமான கீழை ஜஹாங்கீர் அரூஸி கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் வட்டியில்லா அழகிய கடனுதவி திட்டம் துவங்குவதென்றும் இதற்கு விருப்பமுள்ள ஜமாத்துகள்,சங்கங்கள் பொறுப்பேற்று அந்தந்த பகுதியின் கடன் தேவைக்கான மக்களை கண்டெடுத்து பயனாளிகளாக்குவதென்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீழக்கரை நகராட்சிக்கு உரிய இடத்தை அடையாளப்படுத்தினால் அங்கே சிண்டெக்ஸ் டேங்க் அமைத்து அப்பகுதி மக்களுக்கு இலவச குடிநீர் வழங்க கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிறுவனத்திடம் கோரப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் கமிட்டி பொருளாளர் சஃபீக் ஹாஜியார் உறுப்பினர்கள் நிஸ்ஃபார், தாவூத்கான், சீனிமுகம்மது,கண்ணாடி வாப்பா எஸ்டேட் நிர்வாகி சித்திக்,பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் அல்ஹாஜ் ஹாஜா ஜலாலுதீன்,செயளாளர் மூர் நவாஸ்,பொருளாளர் சுல்தான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்