நெல்லை ஆக, 30
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழுவின் உடைய செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு மேற்பார்வையிடுவது என்பது குறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சிக்கு தலைமையாசிரியர் முனைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். பயிற்சி பட்டறையில் வட்டார வள மைய பயிற்றுநர் செல்வகுமார் பயிற்சி கொடுத்தார்.
இப்பயிற்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நைனா முகமது துணைத் தலைவர் உலகம்மாள் ஆசிரியப் பிரதிநிதி உமா மகேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி செய்திருந்தார்.