சென்னை ஆக, 19
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அக்டோபர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் அடுத்து அந்த பதிவில் யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சிவ்தாஸ் மீனாவுக்கு RERE தலைவராக புது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தலைமைச் செயலாளர் பதவியில் ஓய்வு பெற்றாலும் RERA தலைவராக நீடிக்க முடியும். தலைமைச் செயலாளர் பதவியில் மு க ஸ்டாலின் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தின் ஐம்பதாதாவது புதிய தலைமைச் செயலாளராக மு க ஸ்டாலின் செயலாளர் முருகானந்தம் இன்று நியமிக்கப்பட உள்ளதாகவும், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் சேர்ந்த முருகானந்தம் இதற்கு முன்பு போக்குவரத்து, பொதுப்பணி, நகர-ஊரக மேம்பாட்டு துறைகளில் பணிபுரிந்துள்ளார். ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்றதும் முதலில் நிதி செயலாளராக நியமிக்கப்பட்டார்.