Spread the love

சென்னை ஆக, 30

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அவர் அரசியலில் நுழைந்து திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் தினமும் தொண்டர்களை சந்தித்து வந்தார். இதனால் அவரது வீட்டில் தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

இதையடுத்து தீபா புதிய அமைப்பை தொடங்கி அதற்கு தொண்டர்களை சேர்த்து வந்தார். அவருக்கு உறுதுணையாக கணவர் மாதவன் இருந்தார். அதன் பிறகு தீபாவுக்கும், மாதவனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அரசியலிலும் அவருக்கு மவுசு குறையத்தொடங்கியது. இதையடுத்து அவர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார்.

பின்னர் கணவர் மாதவனுடன் சேர்ந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடும் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக்குக்கு கிடைத்தது.

தி.நகர் வீட்டில் வசித்து வந்தாலும் அவ்வப்போது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜெ.தீபா திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *