கீழக்கரை ஜூலை, 30
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா, தட்டான்தோப்பு தெருவை சேர்ந்தவர் ரகு 35/24. இவர் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவி ராஜசுதா பெயரில் TATA PUNCH என்கிற நான்கு சக்கர வாகனத்தை மதுரையைச் சேர்ந்த ஸ்ரீ சைமா கார்ஸ் பிரைவேட் கம்பெனியின் ராமநாதபுரம் கிளையில் 21.01.2024 ம் தேதி காருக்கான விலை , வரிகள், ரிஜிஸ்ட்ரேசன் சார்சஸ் உட்பட மொத்தம் ரூ.7,32,000/-செலுத்தி காரை டெலிவரி பெற்றுள்ளார்.
பின்னர் புகார்தாரர் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ ஆபிசில் காரை தனது மனைவி பெயரில் 30.01.2024 ஆம் தேதி ரிஜிஸ்ட்ரேசன் செய்து ,வாகனத்தின் ஆர்.சி.புத்தகத்தை கேட்டபோது உங்களுடைய வீட்டிற்கு
அனுப்புவதாக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பணிபுரியும் சைய்யது கூறியுள்ளார். இது சம்மந்தமாக நசீர் என்பவரை தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
நசீரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆர்.சி.புத்தகத்தை வாங்குவதற்கு
ஆர்.டி.ஓ ஆபிசில் வேலை செய்யும் செய்யது என்பவருக்கும் பிற அதிகாரிகளுக்கும் பணம் ரூ.2500/- கொடுத்தால் தான் கிடைக்கும் என்று கூறவும்,நான் பணமெல்லாம் கொடுக்க முடியாது டீலரிடம் பேசிக்கொள்கிறேன் என்று ரகு கூறியுள்ளார்.
பின்னர் புகார்தாரர் பல மாதம் காத்திருந்தும் ஆர்.சி.புக் கிடைக்காததால் மீண்டும் டீலரிடம் சென்று மேனேஜர் திரு. முருகேசன் அவர்களிடம் நசீர் தன்னிடம் பணம் கேட்ட விபரத்தை கூறி லஞ்சமாக பணமெல்லாம் தரமுடியாது,காருக்கான தொகையை முழுமையாக செலுத்தி விட்டேன் என்று கூறி எனது ஆர்.சி.புத்தகம் எங்கே என்று கேட்டுள்ளார்.
அதற்கு மீண்டும் நசீர் என்பவர் எங்களது ஏஜென்டு அவர் மூலமாகத்தான் எங்களது வாகனங்களை ஆர்.டி.ஓ ஆபிசில் பதிவு செய்கிறோம் என்று கூறவே மனுதாரர் புரோக்கர் நசீரை மீண்டும் சந்தித்த போது அவரும் ஆர்.டி.ஓ ஆபிசில் வேலை செய்யும் திரு.செய்யது என்பவருக்கும் பிற அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்தால் தான் உங்க ஆர்.சி.புத்தகம் தரமுடியும் எனக் கூறவே வேறு வழியில்லாமல்
மீண்டும் ஒருமுறை மேனேஜர் முருகேசன் அவர்களை நேரில் சந்தித்து கேட்டபோது உங்கள் காரை பதிவு செய்ய ஏற்கனவே ஆர்.டி.ஓ ஆபிசிற்கு கொடுத்த லஞ்சபணத்தை தற்போது தாங்கள் கொடுத்தால் தான் கிடைக்கும் எனக்கறாராக கூறிவிட்டார்.
பின்பு ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று செய்யதை நேரில் சந்தித்து எனது ஆர்.சி.புத்தகத்தை எங்கே என மீண்டும் கேட்டதற்கு நசீரிடம் பேசிக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டார்.
எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர் ரகு ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையில்
புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் அவர்களின் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2000 லஞ்சமாக வாங்கிய ராமநாதபுரம் ஸ்ரீ சைமா டாட்டா மோட்டார்ஸ் மேனேஜர் முருகேசன் 53/24 கையும் களவுமாக பிடிபட்டார்.
மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய ஆர்.டி.ஓ அலுவலர் திரு. சைய்யது 44/24 மற்றும் ஏஜெண்டு திரு.நசீர் 43/24 ஆகிய இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள்
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகாருக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் .
DSP-9498215697;9944266948
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்