சென்னை ஜூலை, 26
ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தது பேசிய அவர், அக்டோபர் முதல் ராமேஸ்வரம் மண்டபம் இடையே ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே பணிகளுக்கு 6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.