கேரளா ஜூலை, 25
கேரளாவில் 14 வயது சிறுவன் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மேலும் 60 பேர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை தமிழக கேரளா எல்லையில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கேரள எல்லையோரம் இருக்கும் கல்லூரி மாணவர்கள் கேரளாவிற்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.