தஞ்சாவூர் ஆக, 29
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது தஞ்சை மாவட்ட த்தை சேர்ந்த திருநங்கைகள் அளித்துள்ள மனுவில், நாங்கள் 100 நபர்கள் உள்ளோம். எங்களுக்கு வீடு, நிலம் இல்லை. வாடகைக்கும் வீடு எதுவும் கிடைக்கவில்லை. இருக்க இடம் இல்லாமல் தவித்து வருகிறோம்.
எனவே திருநங்கைகள் அனைவருக்கும் அரசு வழங்கும் இலவச மனை வழங்க வேண்டும். இதே போல் எங்களின் வாழ்வாதாரம் உயர அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் கடன் மானியம் வழங்கிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.