சென்னை ஜூலை, 14
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரம் தென்மேற்கு வங்க கடலில் 18-ம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.