சென்னை ஜூலை, 11
ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களில் ஒருவனான ரூசோவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.2438 கோடி பண மோசடி செய்த வழக்கில், கடந்தாண்டு கைது செய்யப்பட்ட அவர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது ஜாமின் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.