சென்னை ஜூலை, 7
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அவரது நண்பர் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது இணைந்துள்ளார். கதைப் படி சுருதி ரஜினியின் மகளாக நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தொடர்பான காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.