ஜூலை, 3
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் உயர்த்தப்பட்ட புதிய கட்டடணகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இரண்டு நிறுவனங்களும் பிரிப்பெய்டு, போஸ்ட் பெய்டு கட்டணங்களை 10 முதல் 27% வரை உயர்த்தி உள்ளன. இதனால் ஆண்டுக்கு தற்போது செலுத்தும் கட்டணத்தை விட 650 ரூபாய் வரை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வோடபோன் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்திய நிலையில் அதன் கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.