ராமநாதபுரம் ஜூலை, 2
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தனுஷ்கோடி, பாம்பன், நம்புதாளை பகுதிகளைச் சேர்ந்த 4 நாட்டு படகுகளுடன் 25 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று அதிகாலை சிறை பிடித்து சென்றது. எல்லை தாண்டிய வழக்கில் கைதான ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கு ஜூலை 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.