ஜூன், 29
ஜியோ, ஏர்டெல் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு கட்டணங்களை 11 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா ரீசார்ஜ் விலை ரூ.299 இல் இருந்து ரூ.349 ஆகவும், 365 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் விலை ரூ.2,899 ல் இருந்து ரூ.3,499 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டணம் உயர்வு ஜூலை 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.