சென்னை ஆக, 29
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 31ம் தேதி திரைக்கு வருகிறது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து விக்ரம் மூன்று படங்களில் நடிப்பதற்கு படிக்க தயாராகியிருக்கிறார்.