சென்னை ஜூன், 15
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அதிகாலை முதல் 11 மாவட்டங்களில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு உற்சாகமாக மீன் பிடிக்க சென்றனர். கடந்து ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய மீன் பிடி தடைக்காலம் 61 நாட்களுக்கு பின் நேற்றுடன் நிறைவடைந்தது. இரண்டு மாதங்கள் இடைவெளி இருந்ததால் அதிக மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் மீன்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.