சென்னை ஜூன், 13
தமிழக அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான தேவை போக 1,862 ஆசிரியர்களும், அவர்களுக்கான பணியிடங்களும் உபரியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.