சென்னை ஜூன், 2
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னை புறநகரில் உள்ள பரனுர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சமாக 20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய துவங்க கட்டணம் தேர்தல் காரணமாக உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் அமல்படுத்தப்படுகிறது.