கொல்கத்தா மே, 28
வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் நேற்று வங்கதேசம் கரையை கடந்தது. இதன் காரணமாக அங்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இடி விழுந்து ஒருவர், மரம் விழுந்து ஒருவர் என ஆறு பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 2140 மரங்கள் வேருடன் சாய்ந்தன 337 மின்கம்பங்கள் கீழே விழுந்தன. இரண்டு லட்சத்துக்கு அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.