சென்னை மே, 27
சவுதி அரேபியாவின் மெக்காவுக்கு ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர். இதில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் 5,746 பேர் தனி விமான மூலம் மெக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு அரசு மானியமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பயணத்திற்காக முதல் கட்டமாக நேற்று சென்னையில் இருந்து 326 பேர் விமானம் மூலம் ஹஜ் யாத்திரை புறப்பட்டனர்.