சென்னை மே, 24
மக்களவை தேர்தல் முடிவுகள் வந்ததும் அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதை தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது தேர்தலில் கடமைக்கு பணியாற்றியவர்கள், சரிவராத செயல்படாத அமைச்சர்கள் என பத்து பேர் கொண்ட பட்டியலை தயாரித்து உள்ளதாகவும் அவர்களின் இலாக்காவை மாற்ற முதல்வர் திட்டமிட்டு இருப்பதாகவும் புது தகவல் வெளியாகி உள்ளது.