சென்னை மே, 24
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிட்டது. இந்நிலையில் புகழேந்தி சட்டமன்ற உறுப்பினர் மறைவால் விக்ரவாண்டிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. ஆனால் பாஜகவை கலந்து ஆலோசிக்காமல் இவ்வாறு அறிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு கட்சிகள் இடையேயும் புகைச்சல் நிலவுவதாகவும், ஒருவேளை பாஜகவும் தனது வேட்பாளரை நிறுத்தலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.