சென்னை மே, 22
உலகம் முழுவதும் கேபி2 வகை கொரோனா தொற்று பரவி வருவதால் பொது இடங்களில் மாஸ்க் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் குறைந்த அளவிலேயே இந்த வகை தொற்று பதிவாகி இருப்பதால் அச்சப்பட தேவை இல்லை என்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.