ஹரியானா மே, 21
ஹரியானாவில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி சென்றபோது, மத்திய அரசு எல்லையில் ராட்சத தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்தது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் பாஜக வேட்பாளர்களுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.