திண்டுக்கல், மே 20
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த பத்து நாட்களாக கனத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அப்பகுதியில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் பெய்து வந்த கனமழையில் சாலையோர மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் உடனே விரைந்து வந்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அப்பகுதியில் உள்ள மரங்களை சாலையோரங்களிலிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து சாலை சரி செய்யப்பட்டு வாகன போக்குவரத்து நிலை மீண்டும் இயல்பு நிலைக்கு தொடங்கியது.