துபாய், மே 14
ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அன்வர் குழும நிறுவனங்களில் ஒன்றான அன்வர் வணிக சேவை நிறுவனம் அமீரகத்தில் பல பகுதிகளில் இயங்கி வருகின்றது மேலும் அதன் நிறுவன கிளையை துபாய் அல் கிசஸ் பகுதியில் திறந்துள்ளது.
இந்நிறுவன அலுவலகத்தை அன்வர் குழுமங்களின் வர்த்தக ஒருங்கிணைப்பாளர்
அலி சயீத் அலி புத்தவில் அல்மத்ரூசி அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன் மற்றும் இஸ்மாயில் அலி முஹம்மது அல்மலாகி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இவ்விழாவில் அபுதாபி அதீப் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அன்சாரி, அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பால் பிரபாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்./அமீரக செய்திப் பிரிவு. U.A.E.