துபாய் மே, 16
ஆசியாவிலேயே மிகப்பெரிய மியூசிக் ஸ்டுடியோ ஒன்றை துபாயில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அமைத்துள்ளார். உலகின் விலை உயர்ந்த இசைக்கருவிகள் ரெக்காடர்கள் மிக்ஸர்கள் தேவைக்கேற்றவாறு அறையில் அளவினை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையில் அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டூடியோவுக்கு ஃபிர்தௌஸ் ஸ்டுடியோ என அவர் பெயரிட்டுள்ளார். ஃபிர்தௌஸ் என்ற பெர்சிய சொல்லுக்கு சொர்க்கம் என்று பொருளாகும்.