கீழக்கரை மே, 4
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
வீ கேர் என்னும் நிறுவனத்தில் இருந்து தகுதியுடைய மாணவர்களை பணியமர்த்த இந்நிறுவனத்தின் மனித வள மேலாளர்கள் கிரண் குமார், மோகனா மற்றும் ஸ்வேதா ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர்.
முன்னதாக நடந்த விழாவில் பேசிய கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் கல்லூரிகள் என்பவை கல்வியை வழங்குவதோடு மட்டுமல்ல வேலை வாய்ப்பையும் வழங்கி மாணவர்கள் வாழ்க்கையை வளமாக்க வேண்டும் எனவே எங்களது கல்லூரி இதனை முதன்மையான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றார்.
கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் தற்பொழுது படிப்பை முடித்தவுடன் பணியில் அமர வெவ்வேறு நிறுவனங்களில் பணி ஆணைகள் பெற்றுள்ளனர் 100% அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்களது கல்லூரி செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
இம்முகாமில் செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழக்கரை முகமது சதக் ஹமீது பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இராமநாதபுரம் ஆகிய கல்லூரிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில் 42 மாணவ மாணவியர்கள் வேலை வாய்ப்பு உத்தரவு பெற்றனர் முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் பேராசிரியர் விக்னேஷ் குமார் மற்றும் பெண்கள் கல்லூரி பேராசிரியை மரகதம் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
வேலை வாய்ப்பினை பெற்ற 42 மாணவர்,மாணவியருக்கு நமது வணக்கம் பாரதம் இதழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்