குஜராத் மே, 1
பாஜக ஆட்சியில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் அகமதாபாத்தில் பிரச்சாரம் செய்த அவர் சத்தீஸ்கரின் சில பகுதிகளில் நக்சல்கள் இருப்பதாகவும், அவர்களைக் களையெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மோடியின் மூன்றாவது முறையாக பிரதமர் ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நக்சல்கள் நாட்டிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.