புதுடெல்லி ஏப்ரல், 30
வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதாக ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் வரை வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை கண்டறிந்த ரிசர்வ் வங்கி வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில், இதனை திருத்திக் கொள்ளுமாறும், பெறப்பட்ட கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது.