சென்னை ஏப்ரல், 27
அனைவரும் கல்வி உரிமை சட்டத்தின் படி 6,7,8 ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏழாம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு மதிப்பெண் கிரேடுகளை பதிவுமாறும், எட்டாம் வகுப்புக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதியுமாறும் கூறப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி குறித்து ஆசிரியர் குழு ஒப்புதலுடன் முடிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.