கிருஷ்ணகிரி ஏப்ரல், 21
கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த நண்பர்கள் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.