திருவனந்தபுரம் ஆக, 27
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் 7 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதேபோல் புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16 ம் தேதி நடை திறக்கப்பட்டு 21 ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன.
மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் இதனை தவிர்க்க சிறப்பு பூஜைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு பம்பையில் உடனடி முன்பதிவு செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.