கீழக்கரை ஏப்ரல், 16
ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிஅலுவலக பின்புறத்தில் பழைய தெருவிளக்கு லைட்டுகள் கம்பிகள் என குவியல் குவியலாய் குப்பை கிடங்காக காட்சி அளித்தன.
இதுகுறித்து கீழக்கரை சமூக ஆர்வலர் கிரௌன் ஹுசைன் தமது முகநூல் பக்கத்தில் நகராட்சி அலுவலகமா? அல்லது பழைய இரும்பு கடையா? என கேள்வி எழுப்பியிருந்தார்?பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அவசர அவசரமாக நகராட்சி நிர்வாகம் பழைய தெருவிளக்கு லைட்டுகள் கம்பிகளை அப்புறப்படுத்தியது.
மேலும் லாரிகளில் ஏற்றி செல்லப்பட்ட சாதனங்கள் நகராட்சிக்கு சொந்தமானதா? அல்லது தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.நகராட்சிக்கு சொந்தமானதென்றால்…பழைய பொருட்கள் ஏலம் விடப்பட்டனவா? ஏலம் எடுத்தவர் யார்? எவ்வளவு தொகைக்கு ஏலம் கொடுக்கப்பட்டது? என்ற கேள்விகள் சமூக ஆர்வலர்களிடமும் பொதுமக்களிடமும் எழுந்துள்ளன.
இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டியது கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தான்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்.