நீலகிரி ஏப்ரல், 15
2ஜி குறித்து பேசும் அண்ணாமலை 5ஜி ஊழல் குறித்து பேச தயாரா என ஆ.ராசா கேள்வி எழுப்புகிறார். நீலகிரியில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர் அறியாமையில் பேசுகிறார் என சொல்லக்கூடாது. ஆனால் அறிவிலிதனமாக பேசுகிறார். 2ஜி தீர்ப்பை படிக்க வேண்டும் அந்த வழக்கில் அப்பில் செய்ய வேண்டும் அதனை எதிர்கொள்ள நான் தயார். அதிமுகவினர் 2ஜி விவகாரத்தில் எதுவும் தெரியாமல் பேசுகின்றனர் என்றார்.