கோவை ஏப்ரல், 15
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி நேற்றிரவு பத்து மணிக்கு மேல் பரப்புரையில் ஈடுபட்டதாக தேர்தல் பறக்கும் படையினர் புகார் கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அண்ணாமலை உட்பட 300 பேர் மீது அனுமதி இன்றி ஒன்று கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.