சேலம் ஏப்ரல், 7
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட பருவமழை வழக்கத்தை விட குறைந்த அளவை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் வறண்டது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். சாலையில் செல்பவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குடைகள் பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அக்னி நட்சத்திர காலத்தில் மேலும் வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள், தொழிலாளிகள் உட்பட அனைத்து தரப்பினரும் அச்சமடைந்துள்ளனர்.