அஜ்மான் ஏப், 2
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 47 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய 12ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி அஜ்மான் பீச் ஹோட்டலில் சங்கத்தின் தலைவர் M.J. அவுலியா முகம்மது தலைமையில் நடைபெற்றது.
இதில் தோப்புத்துறை சிறுவர் சிறுமிகள் திருக்குர்ஆன் சூராக்களை மனனம் செய்து ஓதினர்,
சங்கத்தின் செயலாளர் A. அஹமது அனஸ் வரவேற்புரையாற்ற சங்கத்தின் மூத்த உறுப்பினர் பன்னாட்டு தொழிலதிபர் M. சுல்தானுல் ஆரிபீன் ஒற்றுமையின் முக்கியத்துவமும், ஊரின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் உரையாற்றினார்,
ISMA நிர்வாகி M.S.M. சாதிக் அலி, மருத்துவ சேவையில் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து பேசிய அவர் துபாயில் செயல்பட்டு வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தினால் ஊரில் இயங்கிக் கொண்டிருக்கும் அரபிக் கல்லூரி, பள்ளி நிர்வாகம், கல்வி உதவி, மருத்துவ உதவி, விளையாட்டு அரங்கம் மற்றும் பொது நூலகம் போன்ற தொலைநோக்கு திட்டங்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தை பாராட்டியும், சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு நினைவு பரிசும், பொன்னாடை போர்த்தியும் மற்றும் ஜனவரி 2024ல் நடந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பெண்கள் பகுதியை சிறப்பாக ஒருங்கிணைத்த நான்கு பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டது.
கடந்த மாதம் தோப்புத்துறைவாசி Y. நஜிபுதீன் என்பவர், துபாய் சாலையோரம் தான் கண்டு எடுத்த AED 34,800 இந்திய மதிப்பில் ரூபாய். 7,85,450 தொகையை துபாய் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததற்க்கு துபாய் காவல்துறை அவரை அழைத்து பாராட்டு சான்றிதழ் கொடுத்து அவரை கவுரவப்படுத்தி இருந்தது. அவரின் நேர்மையை தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் பாராட்டி கௌரவிக்கும் வண்ணம் அவருக்கு நினைவு கேடயம் வழங்கி , பொன்னாடையும் போர்த்தினர்.
இந்நிகழ்வை சங்கத்தின் துணைத் தலைவர் J. செய்யது அபு ஹக்கீம் தொகுத்து வழங்கினார். இறுதியாக பொருளாளர் M. முகம்மது ஷா நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவில் சுமார் 400 க்கும் மேற்பட்ட அமீரக வாழ் தோப்புத்துறைவாசிகள் ஆண்களும், பெண்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.