துபாய், அக், 6
360 நபர்களுக்கு 60 நாட்கள் தொடர்ச்சியாக வர்த்தக ஆலோசனைகளை வழங்கியதற்கான உலக சாதனை விருது வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரக துபாயில் அன்வர் பிசினஸ்மென் குழுமத்தின் வாயிலாக மாதம்தோறும் வர்த்தக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச உலக சாதனை சான்றிதழ் (IWR BOOK OF WORLD RECORD) நிறுவனத்தின் சார்பில், தொழில் ஆர்வலர்களுக்கு வர்த்தக ஆலோசனைகள் வழங்கியதற்கான உலக சாதனை விருது, அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீனுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை அமீரகப் பிரமுகர் அலி சயீத் அலி புத்தவில் அல் மத்ரூசி வழங்கி கவுரவித்தார். மேலும் ‘விஷன் 360’ என்ற இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உலக சாதனை சான்றிதழ் நிறுவன பிரதிநிதி ராஜேஷ் பெர்னாண்டோ, சென்னை குல்பி சாதிக், ராபின், ரபிக், செய்யது, கேப்டன் டிவி கமால், தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் நஜீம் மரிக்கா உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஒவ்வொரு மாதமும் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வர்த்தகத்துறையில் தமிழர்கள் அதிக அளவில் ஈடுபட உதவியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
M. நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.