துபாய் மார்ச், 24
ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக அணைத்து இந்திய அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர்க்கான இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வு துபாய் அல்கூஸ் பகுதி உள்ள மகளிர் தங்கும் விடுதியில் அஇ அதிமுக அமீரக மாநில செயலாளர் டைக்கர் ரவி என்ற ரவிசந்திரன் அறிவுறுத்தலின்படி அமீரக அமைப்பின் மகளிர் அணி தலைவி சமீம் பானு, புரட்சி தலைவி பேரவை துணை தலைவர் காஜா மொஹிதீன் ஆகியோர் தலைமை ஏற்பாட்டில் புரட்சி தலைவி பேரவை செயலாளர் சரவணன் முன்னிலையில் 100 மேற்பட்ட மகளீர்களுக்கு இஃப்தார் எனும் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
புனித ரமலான் மாத இந்த அழகிய நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வணக்கம் பாரதம் தமிழ் வார இதழின் வளைகுடா முதன்மை நிருபர் தஸ்லீமா, தமிழ் பெண்கள் அஸோஸியன் பொதுச்செயலாளர் சான்யோ ஆகியோர் கலந்துகொண்டு அங்குள்ள மகளீர்களோடு இணைந்து நோன்புதிறந்து அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறினர்.
மேலும் இந்நிகழ்விற்கு வந்த சிறப்பு விருந்தினர்களுக்கு அமீரக அஇஅதிமுக சார்பில் பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. நிறைவாக மகளிர் அமைப்பின் தலைவி சமீம் பானு நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,//இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.