சென்னை மார்ச், 20
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் யூவிக இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019-ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன் கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும் இந்த ஆண்டுக்கான பயிற்சி காலம் மே 13 முதல் 24 வரை, விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். 9ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.