கீழக்கரை மார்ச், 13
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் கடத்தல்களை தடுக்ககோரியும்,காரணமானவர்களின் மீது தயவுதாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுமென அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை கீழக்கரை அதிமுக நகர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்திற்கு அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் முருகவேல், நகரப்பொருளாளர் அரிநாராயணன், துணைச்செயலாளர் குமரன், ஜிகே.வேலன்,முனியசாமி,ஐ.டி.விங் சிவபாலாஜி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை நகர் செயலாளர் செல்வ கணேஷ பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இப்போராட்டத்தில் கூட்டணி கட்சியான SDPI கட்சியின் நகர் செயலாளர் காதர், முன்னாள் நகர் தலைவர் ஹமீது பைசல், முன்னாள் நகர் செயலாளர் பக்ருதீன், அதிமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
கீழக்கரை நகர் அதிமுக செயலாளர் ஜகுபர் உசேன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்