சென்னை மார்ச், 9
ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.48,320-க்கும், கிராமுக்கு ரூபாய் 25 உயர்ந்து ரூ.640க்கும் விற்பனையாகிறது. அதேவேளை ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ. 78க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே தங்கம் விலை ₹880 உயர்ந்துள்ளது.