சென்னை மார்ச், 4
நடிகை தமன்னா தன் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா காவலா பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். ஒரு படத்திற்கு இரண்டு கோடி வரை சம்பளம் பெற்று வந்தார் அவர் லஸ்ட் ஸ்டோரில் படத்திற்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வருவதாகவும், அதனால் அவர் தன்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.