சென்னை மார்ச், 3
அரசியலில் அடி எடுத்து வைக்கும் முன் விஜய் நடிக்க உள்ள கடைசி படத்தை தயாரிக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறது என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ், தேனாண்டாள் மூவிஸ், சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதனை தயாரிக்க ஆர்வமாக இருக்கின்றன. இந்நிலையில் அந்த வாய்ப்பை RRR படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டைய்ன்மென்ட் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.