கீழக்கரை மார்ச், 1
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு மருத்துவமனையில் கூடுதல் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில் நகராட்சி ஆணையரின் சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தில் சுகாதாரத்துறை அமைச்சரின் புகைப்படமோ,பெயரோ அச்சிடப்படவில்லை.இதுகுறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் சிலரிடம் கேட்டபோது, அமைச்சரின் புகைப்படம் சேர்க்கப்படாதது வருத்தமளிப்பதாகவும் நகர்மன்ற உறுப்பினர்களின் பெயரை சேர்க்காமல் விளம்பரம் செய்ததும் தவறான முன்னுதாரமாகி விட்டது என குமுறினர்.
கவுன்சிலர்களின் பெயர்களை சேர்க்காமல் இந்த நாளிதழ் விளம்பரம் நகராட்சி ஆணையரின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளதால் இதற்கான கட்டண தொகையை நகராட்சி நிர்வாகம் கொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கவுன்சிலர்கள் கூறினர்.
ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் எந்தவொரு அரசு திட்ட பணிகளானாலும் அதற்கான விளம்பர தளத்தில் தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள் பெயர் இடம் பெறுவது இயல்பான ஒன்றாகி விட்டது. ஆனாலும் இந்த நிலைபாடு கீழக்கரை நகராட்சியில் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகும்?
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்