துபாய் பிப், 29
ஐக்கிய அரபு அமீரக துபாயில் வசிக்கும் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரைச் சேர்ந்தவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாய் முஸ்ரிப் பூங்காவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வி.களத்தூர் சங்கமம் என்ற தலைப்பில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அபுதாபி, துபாய், சார்ஜா, ராசல்கைமா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வி.களத்தூரைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்திலிருந்து தொழிலதிபர் எம் எஸ் டைல்ஸ் சாதிக் பாஷா, அல் ரீம் நிறுவனத்தின் சேர்மன் இளையான்குடி அபுதாஹீர், வழக்கறிஞர் முஹம்மது யூனுஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இவ்விழாவை வி.களத்தூர் சங்கமம் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அபுதாபி, துபாய், சார்ஜா, ராசல்கைமா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வி.களத்தூரைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்திலிருந்து தொழிலதிபர் எம் எஸ் டைல்ஸ் சாதிக் பாஷா, வழக்கறிஞர் முஹம்மது யூனுஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இவ்விழாவை வி.களத்தூர் சங்கமம் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.