துபாய் பிப், 26
ஐக்கிய அரபு அமீரக துபாயில் அன்னபூர்ணா உணவகம் மேல்மாடியில் உள்ள நிகழ்ச்சி ஹாலில் பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆரின் கதை மற்றும் அதன் ஆங்கில பொழிபெயர்ப்பான MGR – Man of Humanity ஆகிய நூல்களை வெளியிடும் நிகழ்ச்சி இதயக்கனி S.விஜயன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், TEPA பால் பிரபாகர், நாகப்பன், அமீரக தமிழ் சங்கத்தலைவி டாக்டர் ஷீலா ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் சிறப்புகளைப்பற்றி வாழ்த்தி பேசினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில் ஊடகவியலாளர், ‘மின்னல் பரிதி’ மின்னிதழ் பொறுப்பாசிரியர் கடற்கரை பாண்டியன் மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தினர். நிகழ்வின் நிறைவில் வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து உபசரித்து நிகழ்ச்சி நிறைவுசெய்யப்பது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.